தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கைத்தறி கற்று கொடுத்து அதன் மூலமாக மாதம் ரூ.11,000 ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேலையில்லாத பெண்களுக்கு ரூ.11,000 ஊக்கத்தொகை
இதற்காக, நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் மூலமாக ரூ.1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லாத பெண்களுக்கு ரூ.11,000 ஊக்கத்தொகை
மேலும், 18 முதல் 35 வயது வரை உள்ள எழுத, படிக்க தெரிந்தவர்கள் இந்த நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். எனவே, விருப்பமுள்ளவர்கள் www.loomworld.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வேலையில்லாத பெண்களுக்கு ரூ.11,000 ஊக்கத்தொகை
மேலும், இது தொடர்பாக நாளை ஏ.என்.எச்.8ஸ்ரீ கெளரியம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 31/1, ஆசாரி சந்து, நாகல்நகர், திண்டுக்கல் என்கிற முகவரியில் நடைபெற இருக்கும் முகாமில் கலந்துகொண்டும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.