தையல் இயந்திரம் இலவசமாக வேண்டுமா?/ Do you want a sewing machine for free?
தமிழக அரசு, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறது.
இத்திட்டம் சுயவேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த தையல் இயந்திரமானது மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் கைமுறையாக இயக்கப்படும் இயந்திரங்களை விட எளிதாகவும் வேகமாகவும் தையல் வேலைகளைச் செய்ய உதவுகின்றன, இது மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தகுதிகள் என்ன.?
40 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட கை கால் இயக்க மாற்றுத்திறனாளிகள்
செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள்
அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளிகள்
மூளை முடக்குவாதம். தசை சிதைவு நோய், புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்.
10 வருடங்களில் பெறாதவராக இருத்தல் வேண்டும்.
18 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர்கள்.
தேவைப்படும் ஆவணங்கள்
ஆதார் அட்டை. | பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் (NIDC/UDID).
தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று.
விண்ணப்ப முறை
தென் சென்னை மாவட்டத்தில், ஆகஸ்ட் 19, 2024-க்குள் இ-சேவை மையம் வழியாக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்காணல் மூலம் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். சென்னையில் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களும் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.