நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் / Private sector employment camp in Nagercoil
நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
இந்த முகாமில் குமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கணினி பயிற்சி போன்ற கல்வித்தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது. முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.