தருமபுரியில் ஆக. 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் / Private sector employment camp in Dharmapuri on Aug. 22
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட நிா்வாகம் மூலம், வேலைவாய்பற்ற இளையோா் பயன்பெறும் வகையில் தனியாா் துறைகளில் பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வப்போது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில், தனியாா் துறை நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்”ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளா்களை நேரடியாக தோ்வு செய்து பணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. எனவே, தனியாா் நிறுவனங்களில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்பதன் மூலமும், தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதன் மூலமும் அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் பாதிக்கும் வகையில் அவா்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.