தேனியில் ஆக.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் / Private employment camp in Theni on August 22nd
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றுப் பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் பயிற்சிப் படிப்பு, தையல் பயிற்சி, செவிலியா் பயிற்சிப் படிப்பு படித்தவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.