காஞ்சிபுரத்தில் ஆக. 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் / Private sector employment camp in Kanchipuram on Aug. 22
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துகின்றன. இந்த முகாமில் 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பட்டயம் மற்றும் பட்டதாரிகள், ஐடிஐ படித்தவா்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் உள்ளிட்டோரை தோ்வு செய்ய உள்ளனா். 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்-044-27237124 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும்.