TNUSRB காவலர் வேலைவாய்ப்பு 2025 – 3,644 காலியிடங்கள் / TNUSRB Police Constable Recruitment 2025 – 3,644 Vacancies
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) 2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 3,644 காலியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 22, 2025 முதல் செப்டம்பர் 21, 2025 வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் செய்யலாம்.
எழுத்துத் தேர்வு நவம்பர் 9, 2025 நடைபெறும்.
காலியிட விவரம்
- காவலர் (Grade II Police Constable) – 2,833 இடங்கள்
- சிறைக் காவலர் (Grade II Jail Warder) – 180 இடங்கள்
- தீயணைப்பாளர் (Fireman) – 631 இடங்கள்
மொத்தம்: 3,644 இடங்கள்
சம்பளம்
ரூ.18,200 – ரூ.67,100/-
கல்வித் தகுதி
குறைந்தபட்சமாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.07.2025 நிலவரப்படி)
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 26 வயது
(சில பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)
சிறப்பு ஒதுக்கீடு
- சார்ந்துள்ள வாரிசுதாரர்கள் – 10%
- விளையாட்டு வீரர்கள் – 7%
- முன்னாள் இராணுவத்தினர் – 5%
- ஆதரவற்ற விதவைகள் – 3%
- PSTM (தமிழ் வழி) – 20%
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் துவக்கம்: 22.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025
- திருத்தம் செய்ய கடைசி தேதி: 25.09.2025
- எழுத்துத் தேர்வு: 09.11.2025
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இணைப்பு