ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை விண்ணப்பிப்பது எப்படி? / How to apply for monthly stipend for destitute children?
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- அன்புகரம் நிதி உதவி திட்டத்தின் கீழ், பெற்றோரை இழந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் உறவினர்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு, 18 வயது வரை, கல்வியைத் தொடர, தடையின்றி ரூ.2,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிக் கல்வி மற்றும் அதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்திற்குத் தகுதியான குழந்தைகளின் உறவினர்கள், அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் ஸ்டாலின் முகாம்களிலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிலோ, குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டையின் நகல், பிறப்புச் சான்றிதழ், கல்வி மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.