வங்கிப் பணிக்கு இலவச பயிற்சி / Free training for banking jobs
ஓரியண்டல் இன்சூரன்ஸ் அசிஸ்டன்ட் பணியாளர் ஆட்சேர்ப்பும் – இலவச பயிற்சியும்.
அன்பார்ந்த மாணவர்களே…
அகில இந்தியா இன்ஷியுரன்ஸ் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன் (AIIEA) மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும் (DAEECC) இணைந்து, ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியின் அசிஸ்டன்ட் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
பயிற்சியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்கள்:
10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட நிபுணர்கள் வகுப்புகளை நடத்துவார்கள்.
முழுமையான தயாரிப்பு: தேர்விற்குத் தேவையான அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கிய பாடத்திட்டம்.
வழிகாட்டிகள்: படிப்பிற்கு சிறந்த குறிப்பு நூல்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
அறிமுக நிகழ்ச்சியும் முதல் வகுப்பும்.
தேதி: சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2025.
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: அகில இந்திய இன்ஷூரன்ஸ் ஊழியர் சங்க அலுவலகம். நான்காம் லேன், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, (MOP வைஷ்ணவ் கல்லூரி அருகில்), சென்னை – 600034.
குறிப்பு: அம்பேத்கர் கல்வி மையம் 2012 முதல் இன்சூரன்ஸ், வங்கி, TET, TRB, TNPSC, SI, SSC, RRB, போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
இந்த வாய்ப்பை தகுதியுள்ள அனைத்து தேர்வர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
பி. கிருஷ்ணா – 9444982364
அஸ்கர் ஹுசைன் – 9444928162
எம். நாகராஜன் – 9444622968
இவ்வாறு அம்பேத்கர் கல்வி மையம் சென்னை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.