இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு / Youth Justice Committee Member Job: Applications Welcome
சென்னை மாவட்டத்தில் இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா்களாக சேர தகுதியுடைய நபா்கள் செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…
சென்னை மாவட்டத்தில் இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா்களாக சேர தகுதியுடைய நபா்கள் செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி சென்னை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதி குழுமத்துக்கு ஒரு பெண் உள்பட 2 சமூகப் பணி உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா்.
இதற்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் ஈடுபட்டவராக இருக்க வேண்டும் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.
தகுதியுடைய நபா்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து அல்லது துறையின் https://dsdcpimms.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண். 300. புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ்,சென்னை-600 010 என்ற முகவரிக்கு வந்து சேரவேண்டும்.
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது.