கிராம வங்கிகளில் 13,217 காலிப்பணியிடங்கள் – IBPS வெளியிட்ட அறிவிப்பு – டிகிரி இருந்தால் போதும் /13,217 vacancies in rural banks – IBPS issued notification – Degree is enough
வங்கியில் வேலை பார்க்க விரும்புகிறவரா நீங்கள்? தேசிய அளவில் பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
தேசிய அளவில் வங்கிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
பணியின் விவரங்கள்
தேசிய அளவில் 28 மாநிலங்களில் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) உள்ள குரூப்- A கீழ் Scale-I, II மற்றும் III அதிகாரிகள், குரூப்-B கீழ் அலுவலக உதவியாளர் (Multipurpose) ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. இதில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 7 ஆயிரத்திற்கு அதிகமான காலிப்பணியிடங்களும், அதிகாரி பதவிக்கு 5 ஆயிரத்திற்கு அதிகமான பணியிடங்கள் உள்ளன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
அலுவலக உதவியாளர் | 7,972 |
அதிகாரி (Scale-I) | 3,907 |
அதிகாரி (Scale-II) | 1,139 |
அதிகாரி (Scale-III) | 199 |
மொத்தம் | 13,217 |
வயது வரம்பு
- இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதியின்படி, அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 28 வரை இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் 02.09.1997 முன்னரும், 01.09.2007 பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.
- அதிகாரி பதவியில் Scale-I பணியிடங்களுக்கு 18 முதல் 30 வரை இருக்கலாம். 02.09.1995 முன்னரும் 01.09.2007 பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.
- அதிகாரி பதவியில் Scale-II பணியிடங்களுக்கு 21 முதல் 32 வயது வரை இருக்கலாம். 02.09.1993 முன்னரும் 01.09.2004 பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.
- அதிகாரி பதவியில் Scale-III பதவிக்கு 21 முதல் 40 வயது வரை இருக்கலாம். 02.09.1985 முன்னரும் 01.09.2004 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.
- மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
- கல்வித்தகுதி செப்டம்பர் 21-ம் தேதியின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். கணினி திறன் தேவை. அனுபவம் தேவையில்லை.
- அதிகாரி Scale-I பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி, தமிழ் மற்றும் கணினி திறன் அவசியம். இருப்பினும், வேளாண் சார்ந்த படிப்புகள், தகவல் தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனுபவம் அவசியமில்லை.
- அதிகாரி Scale-II பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரியுடன் 2 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவன அனுபவம் தேவை. வங்கி, நிதி, வேளாண், கூட்டுறவு, தகவல் தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பாடப்பிரிவுகள் கொண்டு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிஏ, சட்டம், எம்பிஏ, மார்க்கெட்டிங், விவசாயம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- துறை சார்ந்த பிரிவுகளில் உள்ள இடங்களுக்கு எலெக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது நிகரான பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் தேவை. சிஏ, சட்டம், எம்பிஏ, மார்க்கெட்டிங், விவசாயம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அதிகாரி Scale-III பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டபப்டிப்புடன் 5 ஆண்டு அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை
- கிராமப்புற வங்கிகளில் உள்ள இப்பணியிடங்களின் தேர்வு முறை பதவிக்கு ஏற்ப மாறுப்படுகிறது. அந்த வகையில், அலுவலக உதவியாளர் பதவிக்கு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது.
- அதிகாரி (Scale-I) பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் நடத்தப்படும். அதிகாரி (Scale-II, III) பதவிக்கு ஒரே கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.175 செலுத்த வேண்டும். செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.