அரசு மருத்துவமனையில் 306 காலி பணியிடங்கள் / 306 vacant posts in government hospital
சென்னை மாநகராட்சிக்கு கீழ் இயங்கி வரும், பெரியார் நகர் அரசு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, தேசிய முதியோர் நல மையம் மற்றும் மாநகராட்சி உட்பட்ட சுகாதார நிலையங்களில் 306 காலிப் பணியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்கள் அனைத்தும் 11 மாத ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளது. மருத்துவத்துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. குறைந்த கல்வி தகுதி கொண்ட பதிவுகளும் இருப்பதால், பல்வேறு தரப்பினர் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்
- செவிலியர் (288)
- சமூக சேவகர் (5)
- உளவியலாளர் (1)
- தடுப்பூசி குளிர் சங்கிலி மேலாளர் (1)
- மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (7)
- நிர்வாக உதவியாளர் (1)
- மருத்துவமனை ஊழியர் (2)
- பாதுகாப்பு பணியாளர் (1)
சம்பளம்
ஒவ்வொரு பதவிக்கான சம்பளம் & கல்வித் தகுதிகள் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக, செவிலியர் பதவிக்கு மாதம் ரூ.18,000, சமூக சேவகர் பதவிக்கு ரூ.23,800 வழங்கப்படும்.
கடைசி தேதி – செப்டம்பர் 15, 2025
விண்ணப்பிக்கும் முறை
https://chennaicorporation.gov.in/ -என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான சான்றிதழ்களை இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.