தமிழக அரசின் மாதம் ரூ. 3000 உதவித்தொகை. இந்த மாதம் யாருக்கெல்லாம் கிடைக்கும் / Tamil Nadu government’s monthly allowance of Rs. 3000. Who will get it this month?
மூத்த வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று, தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, தனியாக தொழில் தொடங்குவதற்காக இளம் வழக்கறிஞர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் இளம் வழக்கறிஞர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ. 3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் இணைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கு, மகப்பேறு காலத்தில் உதவித்தொகையாக ரூ. 6000 வழங்கப்படுகிறது. இதில் முதல் தவணையாக 7 மாதம் முதல் 9 மாதத்திற்குள் ரூ. 3000, இரண்டாவது தவணை குழந்தை பிறந்து 5 மாதத்திற்குள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு பிரசவங்களுக்கு உதவித்தொகை பெற முடியும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை தகுதியுடைய பயனாளர்களின் வங்கிக் கணக்கில் விரைவில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.