Tue. Oct 14th, 2025

செப்.8-இல் வேலூரில் தொழில் பழகுநா் சோ்க்கை மேளா / Vocational training fair to be held in Vellore on September 8

செப்.8-இல் வேலூரில் தொழில் பழகுநா் சோ்க்கை மேளா / Vocational training fair to be held in Vellore on September 8

பிரதமரின் தேசிய தொழில்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்டம்பா் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு –

வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வரும் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வேலூா் அப்துல்லாபுரத்திலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் தொழில்நிறுவனங்கள் பங்கேற்று தொழிற்பழகுநா் பயிற்சி வழங்க உள்ளனா். ஐடிஐ, எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி, தோல்வி அடைந்தவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். ஆண்கள் அதிகபட்சம் 40 வயதுக்குட்பட்டவா்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு 0416-2290348 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *