கூட்டுறவு வங்கித் தேர்வு, காவலர் தேர்வு இலவச பயிற்சி / Free coaching for Cooperative Bank Exam, Police Constable Exam
கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2025 முதல் தொடங்கியுள்ளது . விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு இலவச பயிற்சி பெறலாம் . சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில்இலவசபயிற்சி
தற்போது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் 38 மாவட்டங்களில் 2513 (சென்னை மாவட்டம் 377) தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகும் சென்னை மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் 01.09.2025 முதல் தொடங்கியுள்ளது.இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்த விவரங்களுடன் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்புக் கொள்ளவும்.
மேலும், விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சிவகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர்கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பத்தூரில்இலவசபயிற்சி
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 04.09.2025 வியாழக்கிழமை அன்று முதல் நடத்தப்பட உள்ளது. மேலும் இப்பயிற்சி வகுப்பில் அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும், மாநில அளவிலான மாதிரிதேர்வுகளும் நடத்தப்படும்.
இத்தேர்விற்கான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரருக்குக்கான உச்ச வயது வரம்பு SC/ST – 31, MBC/BC/BCM – 28, OC – 26 ஆகும். இவ்வலுவலகத்தில் பள்ளிப்பாடப் புத்தகங்கள் உட்பட 3000 க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச Wi-Fi வசதி போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/6RCfxsgSbLLNwuUF8 என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு 04179-222033 என்ற இவ்வலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த இத்தேர்விற்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர்கேட்டுக்கொண்டுள்ளார்.