Tue. Oct 14th, 2025

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி – 41 இடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம் / Application opens for 41 vacancies for vocational training in central government institutions in Tamil Nadu

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி – 41 இடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம் / Application opens for 41 vacancies for vocational training in central government institutions in Tamil Nadu

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் கனிம வளங்கள் எடுக்கும் மத்திய அரசு கீழ் செயல்படும் IREL நிறுவனம் அமைந்துள்ளது.

இங்கு பல்வேறு பிரிவுகளில் கீழ் தொழிற்பயிற்சி சட்டம் 1961 கீழ் தொழிற்பயிற்சி பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 41 இடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு 1 மற்றும் 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும்.

பொறியியல் டிகிரி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். ஆலை அமைந்துள்ள அருகில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொழிற்பயிற்சி விவரங்கள்
பட்டப்படிப்பு தொழிற்பயிற்சி
எலெக்ட்ரிக்கல் – 2, சிவில் – 1 மற்றும் மெக்கானிக்கல் -1 என மொத்தம் 4 இடங்கள் நிரப்பப்படுகிறது.

டெக்னீஷியன் தொழிற்பயிற்சி
மெக்கானிக்கல் – 1, எலெக்ரிக்கல் – 1, சிவில் – 2 என மொத்தம் 4 இடங்கள் நிரப்பப்படுகிறது.

தொழிற்பிரிவு பயிற்சி
பிட்டர் – 10, எலெக்ட்ரிஷியன் – 5, மெக்கானிக் – 1, வெல்டர் – 4, எலெக்ட்ரானிக் – 2, ஏசி மெக்கானிக் – 1, டர்னர் – 1, ப்ளமர் – 2, கார்பெண்டர் – 2, ஆய்வக உதவியாளர் – 2, PASAA – 3 என மொத்தம் 33 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் பிளம்பர் மற்றும் கார்பெண்டர் ஆகிய தொழிற்பிரிவிற்கு மட்டும் 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும்.

வயது வரம்பு
தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 25 வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வழங்கப்படும்.

கல்வித்தகுதி

  • பட்டப்படிப்பு தகுதிக்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • டெக்னீஷியன் பிரிவிற்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • பிட்டர், எலெக்ட்ரிஷியன், மெக்கானிக், வெல்டர், டர்னர், பிளம்பர், கார்பெண்டர் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கான இடங்களுக்கு அந்தந்த தொழில் பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • தொலைத்தூர கல்வியில் படித்தவர்கள், பகுதி நேரத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது. அதே போன்று, ஏற்கனவே தொழிற்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.

தொழிற்பயிற்சி உதவித்தொகை
தொழிற்பயிற்சி சட்டம் 1992 விதிமுறையின்படி, தொழிற்பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை மாத அடிப்படையில் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
IREL நிறுவனத்தில் உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மெரிட் முறையில் ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். சின்னவிளை, பெரியவிளை, புத்தூர், மிடாலம், கீழ்மிடலம் மற்றும் குறும்பனை
கொட்டில்பாடு ஆகிய கிராமங்களில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் அசல் சான்றிதழ்களை சரிபாரிப்பிற்கு சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ மற்றும் https://nats.education.gov.in/ ஆகிய இணையதளங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதனைத்தொடர்ந்து, https://www.irel.co.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிட சான்றிதழ், வகுப்பு பிரிவு சான்றித, புகைப்படங்கள் ஆகியவற்றை சேர்ந்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

The Chief Manager – HRM (Legal & ER), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu-629252.

விண்ணப்பங்கள் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் முன்னர் அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்20.09.2025
சான்றிதழ் சரிபார்ப்புபின்னர் அறிவிக்கப்படும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு நிறுவனம் மூலம் வழங்கப்படும் இந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *