Tue. Oct 14th, 2025

ஜெர்மனியில் வேலை வேண்டுமா? மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளம்; தமிழக அரசு இலவசமாக வழங்கும் பயிற்சி / Want a job in Germany? Salary up to Rs. 3 lakh per month; Tamil Nadu government provides free training

ஜெர்மனியில் வேலை வேண்டுமா? மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளம்; தமிழக அரசு இலவசமாக வழங்கும் பயிற்சி / Want a job in Germany? Salary up to Rs. 3 lakh per month; Tamil Nadu government provides free training

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் பல்துறைகளில் திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு, நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தற்போது வெளிநாட்டு வேலைக்கான மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஜெர்மன் நாட்டில் இருக்கும் பணி வாய்ப்பை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும், பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி நிறுவனத்தில் மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளத்தில் பணி வாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். தங்கும் விடுதி வசதியும் வழங்கப்படுகிறது.

ஜெர்மன் மொழி தேர்விற்கான பயிற்சி
ஜெர்மன் நாட்டில் உள்ள பணி வாய்ப்புகளை பெற அந்நாட்டு மொழியில் தகுதி பெற்றிருப்பது தேவையாக உள்ளது. குறிப்பாக மருத்துவம் சார்ந்த படிப்புகள் முடித்தவர்கள், நர்ஸ், பொறியாளர்களுக்கு ஜெர்மன் நாட்டில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கான தகுதியை பெற ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இளைஞர்கள் தனியார் பயிற்சி மையங்களை நாடி வருகின்றனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
இத்துறையின் தாட்கோ மூலம் பல்துறை பயிற்சிகள் இலவசமாக இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் தகுதிப்பெற்று வருகின்றனர். பலரின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது.

யாரெல்லாம் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம்?
இந்த பயிற்சி பற்றி கேள்விப்பட்டவுடன், முதல் தோன்றுவது நான் படிக்கலாம் என்பதுதான். இப்பயிற்சிக்கான தகுதிகள் என்னென்ன என்பதை பற்றி தாட்கோ வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • இப்பயிற்சியை பெற நீங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதார்கள் 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி என்ன?
அதே போன்று, கல்வி அடிப்படையில் விண்ணப்பதார்கள் பி.எஸ்சி நர்சிங் (B.Sc Nursing) பொது நர்சிங் மற்றும் செவிலியர் டிப்ளமோ (GNM Nursing) முடித்திருக்க வேண்டும். இவைமட்டுமின்றி பொறியியல் படித்தவர்களும் கலந்துகொள்ளலாம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணு இன்ஜினியரிங் (EEE), பி.டெக் தகவல் தொழில்நுட்பம் (B.Tech IT) ஆகியவற்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

9 மாதம் பயிற்சி
ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி மொத்தம் 9 மாதங்கள் வழங்கப்படும். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் விடுதி வசதியும் தாட்கோ மூலம் ஏற்படுத்தி தரப்படுகிறது. விடுதிற்கான கட்டணம், பயிற்சிக்கான கட்டணம் ஆகியவற்றுக்கான செலவு தாட்கோ மூலம் ஏற்கப்படும். அதன்படி, இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜெர்மனியில் வேலைவாய்ப்பு
இப்பயிற்சி மூலம் தகுதி பெறும் நபர்களுக்கு பயிற்சி நிறுவனத்தின் மூலமாக வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். அப்படி, தேர்வாகும் நபர்களுக்கு ஜெர்மனியில் வேலை கிடைக்கும். அவர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே மாதம் ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் https://tahdco.com/ என்ற தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, வருமான சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், ஆதார் எண், புகைப்படம், மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரி உள்ளிட்டவை அவசியமாகும். வெளிநாட்டில் பணி எதிர்பார்ப்பவர்களுக்கு ஜெர்மனி சிறந்த தேர்வாகும். தமிழ்நாடு அரசு இலவசமாக ஏற்படுத்தி தரும் இந்த வாய்ப்பை ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்படுத்திகொள்ளலாம்.

இவையில்லாமல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்விற்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. அதற்கும் ரூ.3 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ள எஸ்சி, எஸ்டி தேர்வர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *