இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தமிழ்நாட்டிலேயே பயிற்சி; 537 காலிப்பணியிடங்கள் /Indian Oil Corporation offers training in Tamil Nadu; 537 vacancies
12-ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்? இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உங்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்பு ரெடியாக உள்ளது.
தொழிற்பயிற்சி சட்டம் 1961-கீழ் தேசிய அளவில் குழாய்கள் பிரிவில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 537 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென் இந்தியாவில் மொத்தம் 47 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தியன் ஆயில் தொழிற்பயிற்சி 2025
தென் இந்தியா பகுதியில் ஆந்திர பிரதேசத்தில் 3 இடங்கள், கர்நாடகாவில் 5 இடங்கள், தமிழ்நாட்டில் 39 இடங்கள் உள்ளன. ஆசனூர், செங்கல்பட்டு, சென்னை, மதுரை, ராமநாதபுரம்,
சங்கரி, திருச்சி ஆகிய பகுதிகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எனென்ன பிரிவுகளில் தொழிற்பயிற்சி நிரப்பப்படுகிறது?
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் மற்றும் இன்ஸ்ரூமெண்டேசனினி டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பதவி உள்ளன.
கணக்கு (Accountant) மற்றும் உதவி எச்.ஆர் பிரிவுகளில் தொழிற்பிரிவு அப்ரண்டிஸ் இடங்கள் உள்ளன.
இவையில்லாமல் 12-ம் வகுப்பு தகுதியில் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வயது வரம்பு
இந்தியன் ஆயில் தொழிற்பயிற்சிக்கு 31.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் 24 வரை இருக்கலாம். வயது வரம்பில் மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தளர்வு பின்பற்றப்படுகிறது. அதே போன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 வருடங்கள் வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி
டெக்னிக்கல் அப்ரண்டிஸ் பதவிக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
கணக்கு மற்றும் உதவி எச்.ஆர் பிரிவிற்கு வணிகம் மற்றும் ஏதேனும் ஒரு டிகிரியை முடித்திருக்க வேண்டும். டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் Domestic Data Entry Operator பிரிவில் உள்ள இடங்களுக்கு அதற்கான திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை
தொழிற்பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு உதவித்தொகை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மொத்தம் 12 மாதங்களுக்கு பயிற்சி பெற வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பிக்கும்போது குறிப்பிடப்படும் கல்வித்தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையில் பங்குபெற வேண்டும். இறுதியில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பதார்கள் கல்வித்தகுதி சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், திறன் சான்றிதழ், வகுப்பு பிரிவு, பிறந்த தேதி, ஆதார் எண், அடையாள அட்டை, வீட்டு முகவரி உள்ளிட்டவற்றிக்கான அசல் சான்றிதழ்களை சாரிபார்பில் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://plapps.indianoilpipelines.in/ என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முதலில் https://www.apprenticeshipindia.gov.in/ மற்றும் https://nats.education.gov.in/student_register.php என்ற தொழிற்பயிற்சிக்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 29 முதல் பெறப்பட தொடங்கிய நிலையில், செப்டம்பர் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
விவரம் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 29.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.09.2025
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்
இந்தியன் ஆயிலின் குழாய்களை பிரிவில் உள்ள இந்த வாய்ப்பிற்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்க பயன்பெறலாம். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.