Mon. Sep 15th, 2025

என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை; காலியிடங்கள்: 70 / Army jobs for NCC trained graduates; vacancies: 70

என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை; காலியிடங்கள்: 70 / Army jobs for NCC trained graduates; vacancies: 70

இந்திய ராணுவத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள திருமணமாகாத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

பணி: Lieutenant (NCC – Special Entry)

காலியிடங்கள்: 70 (இதில் 7 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்குரியது )

சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500

வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி 19 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பெற்று என்சிசி தேர்வில் குறைந்தபட் சம் “பி” கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பட்டம் பெற்றிருக்க வேண் டும். என்சிசி சான்றிதழ் தேவையில்லை.

உடற்தகுதி: உயரம் 157 செமீட்டரும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு : 2.4 கி.மீட்டர் தூரத்தை 10.30 நிமிடத்திற்குள் ஓடி கடக்க வேண்டும். சிட் அப்ஸ் , புஷ் அப்ஸ், புல் அப்ஸ் மற்றும் நீந்துதல், கயிறு ஏறுதல் போன்ற உடற்திறன் சோதனைகளிலும் வெற்றி பெற வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோ தனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எஸ்எஸ்பி தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர் 2025.

நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரயில், பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வின் போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உரிய இடத்தில் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை Officer Training Academy இல் 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி ஏப்ரல் 2026-இல் தொடங்கும். நேர்முகத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வு 6 செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகையுடன் அதிகாரிப் பணிக்கான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குப்பின் லெப்டினன்ட் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www. joinindianarmy.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.9.2025.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *