என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு / Applications are invited for trainee positions at NTPC
பொதுத் துறையைச் சோ்ந்த மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 15 நிர்வாக பயிற்சியாளர் (மனித வளங்கள்) பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 14/25
பணி: Executive Trainee (Human Resources)
காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 9.9.2025 தேதியின்படி 29-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 40,000 – 1,40,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 65 சதவீத மதிப்பெண்களுடன் மனிதவள மேலாண்மை, தொழில்துறை உறவுகள், பணியாளர் மேலாண்மை போன்ற பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://careers.ntpc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.9.2025