Tue. Oct 14th, 2025

குடிமைப் பணிகளுக்கு இலவச பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி? / Free training for civil services! How to apply?

குடிமைப் பணிகளுக்கு இலவச பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி? / Free training for civil services! How to apply?
தமிழ்நாடு அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மையங்களில் பயிற்சி பெற 525 நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், ஐஏஎஸ் ஐபிஎஸ் இலவச பயிற்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய தேர்வாணைய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான பொது நுழைவுத் தேர்வில் பங்கு பெற்றவர்களின் முழுமையான மதிப்பெண் பட்டியல், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆர்வலர்கள் சென்னை முழுநேரப் பயிற்சிக்கு 225 நபர்கள் மற்றும் பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபர்கள் மற்றும் மதுரை முழு நேர பயிற்சிக்கு 100 நபர்கள், கோயம்புத்தூர் முழு நேர பயிற்சிக்கு 100 நபர்கள் என மொத்தமாக 525 நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆர்வலர்களில் விண்ணப்பிக்கும் ஆர்வலர்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.

சென்னை (முழு நேரம், பகுதி நேரம்) மற்றும் கோயம்புத்தூர் (முழு நேரம்), மதுரை (முழு நேரம்) ஆகிய அனைத்து மையங்களுக்கும் கலந்தாய்வு சென்னை-28 – ல் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் மட்டுமே நடைபெறும். கலந்தாய்வில் ஆர்வலர்கள் தங்களது விருப்ப மையங்களை தெரிவு செய்யலாம். கலந்தாய்வின் போது மூல ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு (Certificate Verification) தற்காலிக சேர்க்கை ஆணை (Provisional Allotment Order) வழங்கப்படும். ஏற்கனவே, இப்பயிற்சி மையங்களில் முழுநேர மற்றும் பகுதி நேர பயிற்சி பெற்றவர்கள் இரண்டாவது முறை முறையே முழுநேர மற்றும் பகுதி நேர பயிற்சிக்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பப் பதிவு துவங்கும் நாள் செப்டம்பர் 9, விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள் செப்டம்பர் 14, முதற்கட்ட தெரிவுப் பட்டியல் வெளியீடு செப்டம்பர் 17, கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 22 மற்றும் 23, தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு விடுதி அறை ஒதுக்கீடு மற்றும் காப்புத் தொகை செலுத்துதல் செப்டம்பர் 24, 30, முதல்நிலை பயிற்சி வகுப்புகள் துவக்க நாள் அக்டோபர் 3ம் தேதி

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், “காஞ்சி”, பசுமைவழிச்சாலை, சென்னை-28. மேலும், விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண்(Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *