அரசு வேலைவாய்ப்பு : மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு / Government Employment: Important announcement for women from the Women’s Self-Help Group
அரசு வேலை தேடும் பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி. குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருப்பவராக இருந்தால் இந்த அரசு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்துக்கு சமூக வள பயிற்றுநர்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட உள்ள சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பல்வேறு கருப்பொருள் மற்றும் நடைமுறையில் உள்ள வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான தலைப்புகளில் பயிற்சிகள் வழங்குவதற்கு சமுதாய வளப் பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர்.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் (ம) நிபந்தனைகள்:
* 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
* குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தி அடைந்த மகளிராக இருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
* பயிற்சி எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்,
* சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்,
* சமுதாய வள பயிற்றுநர்கள் (விவசாயம், விவசாயம் சாரா தொழில்கள், வாழ்வாதாரம்), சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்சார் சமுதாய வள பயிற்றுநர்கள், வட்டார வள பயிற்றுநர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஒத்த தொழில் குழு (CLG) (ம) உற்பத்தியாளர் குழு (PG) உறுப்பினர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
* மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவில் நடைபெற்ற பயிற்சிகளில் குறைந்தபட்சம் 5 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும்,
* கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும்,
* விண்ணப்பதாரர் சார்ந்த சுய உதவி குழுவில் அவருக்கு வாரா கடன் நிலுவை இல்லாது இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வள பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி தீர்மான நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
* தேர்வு செய்யப்படும் சமுதாய வள பயிற்றுநர்களுக்கு சேவையின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும்.
மேற்படி, விண்ணப்பதாரர்கள் தேவையான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் (BMMU) மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்திலிருந்து (DMMU) பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் (BMMU) வரும் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு
மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மைய அலகில் (Bus Stand Help Desk) ஒரு வருட தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்பார்வையாளர் -SUPERVISOR (3 பணியிடம்) : தொகுப்பூதியம் – ரூ.21,000/- (ஒரு மாதத்திற்கு)
சமூகப்பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமுதாய சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் (10+2+3 மாதிரி), கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் (Graduate Preferably in B.A in Social Work / Computer Science / Information Technology/Community Sociology / Social Sciences recognized University, Weightage for work experience candidate, Proficiency in computers and Preference may be given to personnel’s having experience of working in Emergency Help lines)
01.08.2025 அன்றுபடி 42 வயதிற்கு பூர்த்தி அடையாதவர்களாக இருக்க வேண்டும். அவசர உதவி மைய சேவைகளில் முன்அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு (மட்டும் 2025-26 நிதியாண்டின் இறுதி வரை) 10 ஆண்டுகள் வரை ஒரு முறை வயது தளர்வு அனுமதிக்கப்படலாம்.
வழக்குபணியாளர் (ஒரு மாதத்திற்கு) – CASEWORKER (3 பணியிடங்கள்) : தொகுப்பூதியம் ரூ.18,000/-
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது இணையான வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பணி அனுபவம் மற்றும் நல்ல முறையிலான தகவல் தொடர்பு திறன் (பேச்சு திறன்) பெற்றிருக்க வேண்டும்.
அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் (12th passed from a recognized Board / Equivalent Board. Good Communication Skills, Weightage for work experience candidate and Preference may be given to personnel’s having experience of working in Emergency Help lines) 01.08.2025 அன்றுபடி 42 வயதிற்கு பூர்த்தி அடையாதவர்களாக இருக்க வேண்டும். அவசர உதவி மைய சேவைகளில் முன்அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு (மட்டும் 2025-26 நிதியாண்டின் இறுதி வரை) 10 ஆண்டுகள் வரை ஒரு முறை வயது தளர்வு அனுமதிக்கப்படலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல், பணி அனுபவ சான்றுகளின் நகல் இணைக்கப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பப்படிவங்கள், உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். மேற்கண்ட பணியிடங்கள் தற்காலிகமான மதிப்பூதிய அடிப்படையிலானது.
மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 10.09.2025 முதல் 24.09.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001. மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.