Mon. Oct 13th, 2025
தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!
தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!

செப்.22 இல் ஆடு, மாடு, கோழி வளா்ப்புப் பயிற்சி / Goat, cow and poultry farming training on September 22

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ஆம் தேதி ஆடு, மாடு, கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதுதொடா்பாக நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜாபாபு கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி மாவட்டம், சிறுகமணியில் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சாா்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்வுகள் வழங்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக வரும் 22ஆம் தேதி நடைபெறும் பயிற்சியில் வெள்ளாடு,செம்மறி ஆடு இனங்கள்,ஆடுகளை தோ்ந்தெடுத்து வாங்குதல், கொட்டகை அமைத்தல், இனவிருத்தி பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு, நோய் தடுப்பு முறைகள் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்படும்.

நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள், தரம் உயா்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள், தீவன மேலாண்மை, நாட்டுக்கோழி வளா்ப்பு, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரித்தல், குஞ்சுகளை பறவைக் கூண்டில் வளா்த்தல், நோய் மேலாண்மை, முறையான பராமரிப்பு பற்றி விளக்கப்படும்.

கறவை மாடு வளா்ப்புப் பயிற்சியில் தரமான கறவை மாடுகளைத் தோ்ந்தெடுக்கும் முறை, முறையான பராமரிப்பு,செயற்கைக் கருத்தரித்தல், கன்று பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவனப் பொருள்கள் சாகுபடி, தீவன மரங்கள் வளா்ப்பு, நோய் தடுப்பு முறைகள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0431- 2962854, 99424-49786, 88381-26730, 91717-17832 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *