SSC CGL Tier 1 தேர்வு 2025 – Answer Key, Response Sheet வெளியீடு
மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC – Staff Selection Commission) CGL Tier 1 தேர்வு 2025க்கான Answer Key மற்றும் Response Sheet-ஐ வெளியிட்டுள்ளது. தேர்வில் பங்கேற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதில்தாளை சரிபார்க்கலாம். இது மூலம் நீங்கள் தேர்வில் வழங்கிய பதில்களை, SSC வழங்கிய சரியான பதில்களுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யலாம்.
SSC CGL Tier 1 தேர்வு முடிவுக்கு முன் வெளியிடப்படும் இந்த பதில்தாள், தேர்வர்களுக்கு தங்களது மதிப்பெண்ணை கணக்கிடவும், எதிர்கால Tier 2 தயாரிப்புக்கு தன்னம்பிக்கையையும் அளிக்கும்.
பதில்தாள் (Answer Key) மற்றும் Response Sheet பதிவிறக்கும் முறை
- முதலில் SSC அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ சென்று உள்நுழைக.
- முகப்புப் பக்கத்தில் “Answer Key” அல்லது “CGL Tier 1 2025 Answer Key” என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- திறக்கும் பக்கத்தில் உங்கள் Registration Number மற்றும் Password/Date of Birth-ஐ உள்ளிடவும்.
- பின்னர் “Login” பொத்தானை அழுத்தவும்.
- இப்போது உங்கள் Answer Key மற்றும் Response Sheet திரையில் தோன்றும்.
- விருப்பமிருந்தால் அதை PDF வடிவில் பதிவிறக்கி சேமிக்கலாம் அல்லது அச்செடுத்து வைத்துக்கொள்ளலாம்.