‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி / Free beekeeping training
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் பூச்சியியல் துறையில் தேனீ வளர்க்க இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் வெற்றிய நிச்சயம் திட்டத்தின் கீழ், வரும் 27ம் தேதி முதல் தொடர்ந்து 26 நாட்களுக்கு, இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில், 25 பேருக்கு, வணிக ரீதியில் தேனீ வளர்ப்பு குறித்த அனைத்து தொழில்நுட்பங் களும் விளக்கமாக கற்பிக்கப்படும். 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 26 நாட்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், நாளைக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 93635 29576, 94868 93905 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.