Tue. Oct 28th, 2025

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆணையம் (TN MRB) சுகாதார ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2025 | மொத்தம் 1429 பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆணையம் (TN MRB) சுகாதார ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2025 | மொத்தம் 1429 பணியிடங்கள்
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆணையம் (TN MRB) சுகாதார ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2025 | மொத்தம் 1429 பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆணையம் (TN MRB) சுகாதார ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2025 | மொத்தம் 1429 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் ஆணையம் (TN MRB) துறையில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1429 “Health Inspector (சுகாதார ஆய்வாளர்)” பணியிடங்கள் காலியாக உள்ளன. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 27 அக்டோபர் 2025 முதல் 16 நவம்பர் 2025 வரை ஆன்லைன் மூலம் மட்டும் ஏற்கப்படும்.

மொத்த காலியிட விவரம்

பிரிவுகாலியிடங்கள்
GT426
BC364
BCM48
MBC / DNC275
SC250
SCA42
ST24
மொத்தம்1429 காலியிடங்கள்

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு (Biology / Botany / Zoology) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (SSLC அளவில்).
  • மேலும், Two Years Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course Certificate பெற்றிருக்க வேண்டும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பெறப்பட்ட சான்றிதழ்கள் மட்டும் செல்லுபடியாகும்.

வயது வரம்பு

  • குறைந்தபட்ச வயது வரம்பு: 18 வயது
  • அதிகபட்ச வயது வரம்பு: வரையறை இல்லை (No Maximum Age Limit)
  • அரசின் விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பள விவரம் 

  • மாத சம்பளம்: ₹19,500 – ₹71,900/-

விண்ணப்பக் கட்டணம் 

வகைகட்டணம்
SC / SCA / ST / DAP (PH)₹300/-
மற்றவர்கள்₹600/-

தேர்வு நடைமுறை

  • முதலில் Tamil Eligibility Test (SSLC Standard) நடத்தப்படும்.
  • அதில் 40% மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டும் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறுவர்.
  • பின்னர் Computer Based Test (CBT) மதிப்பெண்கள் மற்றும் Covid-19 பணிக்கான ஊக்க மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
  • வாய்மொழி தேர்வு (Oral Test) இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

  1. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் www.mrb.tn.gov.in வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  2. விண்ணப்பிக்கும் முன், உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் நகலை தயாராக வைத்திருக்கவும்.
  3. ஒரு சரியான மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண் அவசியம்.
  4. அனைத்து விவரங்களும் (பெயர், பிறந்த தேதி, முகவரி, வகை போன்றவை) சரியாக நிரப்பப்பட வேண்டும்.
  5. விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் வழியாக மட்டும் செலுத்த வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் தேதி: 16-11-2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *