SASTRA பல்கலைக்கழகத்தில் Field Investigator வேலைவாய்ப்பு 2025
திருவையாறு பகுதியில் அமைந்துள்ள SASTRA Deemed University (சாஸ்திரா பல்கலைக்கழகம்) நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான Field Investigator பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 03 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக அறிவியல் துறையில் M.A பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ரெச்யூமே (Resume) ஐ மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 12 நவம்பர் 2025 ஆகும்.
பணியிடங்கள்
| பதவி பெயர் | பணியிடங்கள் |
|---|---|
| Field Investigator | 03 |
கல்வித் தகுதி
- விண்ணப்பதாரர்கள் எந்தவொரு சமூக அறிவியல் (Social Science) துறையிலும் M.A பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
- குறிப்பிடப்படவில்லை.
சம்பளம்
- மாத சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பக் கட்டணம்
- கட்டணம் இல்லை.
தேர்வு செயல்முறை
- Shortlisted செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.
- நேர்காணல் தேதி மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் Resume-ஐ Principal Investigator Dr. M. Jayanthi (மின்னஞ்சல் முகவரி: jayanthi@mba.sastra.edu) க்கு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 12-11-2025
- தேர்வானவர்களுக்கு நேர்காணல் தேதியை மின்னஞ்சல் வழியாக அறிவிக்கப்படும்.

