மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு / Software Skills Courses: Applications are welcome online
தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்காக, மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட மென்பொருள் திறன் படிப்புகளுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக தேசிய திறன் அகாடமி அறிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்சம் மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இதற்கு தமிழ்நாட்டில் உள்ள 10+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களிடமிருந்து www.nationalskillacademy.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள், மென்பொருள் பொறியியல் டிப்ளமோ, சாப்ட்வேர் இன்ஜினியரிங் பிஜி டிப்ளமோ மற்றும் 100-க்கும் மேற்பட்ட சமீபத்திய ஐடி, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் சான்றிதழ் படிப்புகள் உள்பட பல்வேறு வகையான படிப்புகளில் இருந்து தேர்வு செய்யலாம்.
மேற்கண்ட மென்பொருள் படிப்புகளை முடித்த பிறகு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு 9505800050 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

