இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 – AFCAT 01/2026 நுழைவுத் தேர்வில் 280+ பணியிடங்கள்
இந்திய விமானப்படை (Indian Air Force) 2025 ஆம் ஆண்டிற்கான AFCAT (Air Force Common Admission Test) 01/2026 நுழைவுத் தேர்வுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 280க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்கள் Flying Branch, Ground Duty (Technical & Non-Technical) மற்றும் NCC Special Entry பிரிவுகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக 10.11.2025 காலை 11:00 மணி முதல் 09.12.2025 இரவு 11:30 மணி வரை ஏற்கப்படும்.
பணியிடங்கள்
| பதவி பெயர் | பிரிவு |
|---|---|
| AFCAT Entry (Flying) | பல்வேறு |
| AFCAT Entry (Ground Duty – Technical) | பல்வேறு |
| AFCAT Entry (Ground Duty – Non-Technical) | பல்வேறு |
| NCC Special Entry (Flying) | பல்வேறு |
| மொத்தம் | 280+ பணியிடங்கள் |
கல்வித் தகுதி
- Flying Branch: எந்த ஒரு துறையில் பட்டப்படிப்பு (Graduation) மற்றும் Physics & Mathematics பாடங்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Ground Duty (Technical): BE / B.Tech in relevant Engineering disciplines.
- Ground Duty (Non-Technical): Bachelor Degree in any discipline from a recognized university.
வயது வரம்பு
- Flying Branch: 01.01.2027 அன்று 20 முதல் 24 வயது வரை.
- Ground Duty (Technical/Non-Technical): 20 முதல் 26 வயது வரை.
சம்பளம்
அனைத்து பதவிகளுக்கும் Level – 10 Pay Matrix
₹56,100 – ₹1,77,500 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ₹550/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online Payment Mode)
தேர்வு முறை
- எழுத்துத் தேர்வு (Written Examination)
- SSB Test (Services Selection Board Interview)
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளமான https://afcat.cdac.in இல் சென்று “AFCAT 01/2026” விண்ணப்பத்தைத் தேர்வு செய்யவும்.
- புதிய விண்ணப்பதாரர்கள் “Register Here” மூலம் பதிவு செய்ய வேண்டும்.
- கல்வித் தகுதி, புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தவும்.
- இறுதியாக, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அதன் அச்சுப் பிரதியை வைத்துக்கொள்ளவும்.

