மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், காவலர் வேலை அறிவிப்பு / District wise Rural Development and Panchayat Department Office Assistant, Driver, Guard Job Notification
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
| ஆரம்ப தேதி | 04.11.2025 |
| கடைசி தேதி | 13.11.2025 |
1. பதவி: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)
சம்பளம்: மாதம் Rs.19,500 – 62,000/-
கல்வி தகுதி:
1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3. 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவி: இரவு காவலர்
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50/-
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| மாவட்டம் & கடைசி தேதி | விண்ணப்பிக்க |
| அரியலூர் (14.11.2025) | Click here |
| கடலூர் (20.11.2025) | Click here |
| விழுப்புரம் (20.11.2025) | Click here |
| கரூர் (12.11.2025) | Click here |
| புதுக்கோட்டை (15.11.2025) | Click here |
| திருவாரூர் (16.11.2025) | Click here |
| நாமக்கல் (07.11.2025) | Click here |
| பிற மாவட்டங்களுக்கு விரைவில் பதிவிடப்படும் | |

