Tue. Nov 25th, 2025

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு – கோவை

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்புகோவை

அரசு கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க, ஆனந்த சைதன்யா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய, திறமை வாய்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில், ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, ‘கற்கை நன்றே’ எனும் கல்வி உதவித்தொகை திட்டத்தை, பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

இதற்கு தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல், இன்ஜி., மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்தது, 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும், நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கிராமப்புற மாணவர்கள், ஒற்றைப் பெற்றோர் கொண்ட மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள், https://anandachaitanya.org/karkai-nandre/ என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *