12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு; 618 காலிப்பணியிடங்கள் / Anganwadi Jobs
புதுச்சேரி அரசின் பெண்கள் மற்றூம் குழந்தைகள் மேம்பாடு துறையின் கீழ் காலியாக உள்ள 618 காலிப்பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் என்னென்ன உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் மத்திய அரசு சாக் ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 618 அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு நவம்பர் 23-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், டிசம்பர் 22 வரை விண்ணப்பம் பெறப்படுகிறது. புதுச்சேரியை சேர்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
புதுச்சேரி அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025
| பதவியின் பெயர் | அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் |
| எண்ணிக்கை | 618 |
| வயது வரம்பு | 18-35 |
| கல்வித்தகுதி | 12-ம் வகுப்பு |
| சம்பளம் | ரூ.4000-6000 |
| அறிவிப்பு | அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு 2025 |
| இணையதளம் | https://wcd.py.gov.in/ |
அங்கன்வாடி பணியாளர்கள் தகுதிகள்
- அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதியின்படி, 18 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம்.
- இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
- அங்கன்வாடி மையம் அமைந்திருக்கும் பகுதியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவரா இருக்க வேண்டும்.
- புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மற்றும் கடைசி 5 வருடங்கள் புதுச்சேரியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
சம்பள விவரம்
புதுச்சேரி அங்கன்வாடி பணியிடங்களுக்கு கெளவர ஊதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். பணியாளர் பதவிக்கு ரூ.6,000 மற்றும் உதவியாளர் பணிக்கு ரூ.4,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஊழியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் தரவரிசையில் தெரிவு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள பெண்கள் https://wcd.py.gov.in/ அல்லது https://www.py.gov.in/ ஆகிய இணையதளங்களில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்பிக்க வேண்டும்.
DWCD Anganwadi Worker & Helper 2025 – Important Links
| Link Type | Action |
|---|---|
| Official Notification PDF | Download PDF |
| Apply Online | Click Here to Apply |
| Official Website | Visit Website |

