Mon. Jan 12th, 2026

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் Office Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் Office Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் Office Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் Office Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் (TIDCO) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்Tamil Nadu Industrial Development Corporation Limited (TIDCO)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்30.12.2025
கடைசி நாள்30.01.2026

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி /இரு சக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொதுப்பிரிவு – 18 to 32 வயது

பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் – 18 to 34 வயது

ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் அருந்ததியர் / பழங்குடியின வகுப்பினர் – 18 to 37 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்படும் பட்டியல் மற்றும் நாளேடுகளில் வெளியிடப்படும் அறிவிக்கை மூலம் பெறப்படும் விண்ணப்பங்களிலிருந்து இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு வாசித்தல் மற்றும் எழுதுதல், திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டு விதியை பின்பற்றி தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: https://tidco.com/ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)

Step 2: பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவும்.

Step 3: விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Copy attested by the Gazetted officer) சான்றொப்பம் பெற்று இணைக்க வேண்டும்.

Step 4: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட சான்றிதழ்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவும்.

Step 5: முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்புகளை ஒரு கவரில் வைத்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *