Sat. Jul 26th, 2025

மகளிர் உரிமைத்தொகை திட்ட விவரங்கள் அறிய தொலைபேசி எண்கள்: கரூர்

மகளிர் உரிமைத் தொகை திட்ட விவரங்கள் அறிய தொலைபேசி எண்கள்: கரூர்

கரூா் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த சந்தேகங்கள் அறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. கரூா் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த சந்தேகங்கள் அறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து உரிய தகவல்கள் வழங்கிடவும்,பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் ஆகியவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சியா் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடா்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றை பின்வரும் அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் அழைத்து தெரிந்து கொள்ளலாம்.

மகளிர் உரிமைத் தொகை திட்ட விவரங்கள் அறிய தொலைபேசி எண்கள்: கரூர்

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் – 9489984960, கரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம்– 9489984961, குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம்-9489984962, கரூா் வட்டாட்சியா் அலுவலகம்-9489984963, அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் -9489984964, மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் – 9489984965, புகளூா் வட்டாட்சியா் அலுவலகம் -9489984966, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் அலுவலகம் -9489984967, குளித்தலை வட்டாட்சியா் அலுவலகம் -9489984968, கடவூா் வட்டாட்சியா்அலுவலகம், -9489984969. சம்பந்தப்பட்ட வட்டாட்சியரகங்கள் மற்றும் சேவை மையத்தில் தங்களது குடும்ப அட்டை எண்ணை அளித்து, தங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

மகளிர் உரிமைத் தொகை திட்ட விவரங்கள் அறிய தொலைபேசி எண்கள்: கரூர்

பொதுமக்கள், கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் பேரில் மேல்முறையீடு செய்ய விரும்பும்பட்சத்தில் தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள சேவை மையத்தின் மூலமும் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இது மட்டுமின்றி முதல்வரின் முகவரி திட்டத்தின் இலவச அழைப்பேசி எண் 1100-இல் அழைத்து, தங்களது கோரிக்கைகளை தெரிவித்து விவரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் .பிரபுசங்கா் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Join our-WhatsApp Group for Daily Updates