Tue. Oct 14th, 2025

இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் ‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டம் / A new scheme called ‘Sure Success’ aims to increase youth employment

இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் ‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டம் / A new scheme called ‘Sure Success’ aims to increase youth employment

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் ‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளின் தேவைக்கேற்ப பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது தொலைத்தொடர்பு துறையில் அதிக தேவையுள்ள 5G கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்திற்கான சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. Cultus எனப்படும் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) இந்தப் பயிற்சியை வழங்குகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், பயிற்சி முற்றிலும் இலவசம் என்பதுடன், பயிற்சி காலத்தில் உதவித்தொகை மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள்

இந்தப் பயிற்சியானது சுமார் 4000 இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மொத்தம் 360 மணி நேரம் கொண்ட இந்தப் பயிற்சி, 18 வாரங்களுக்கு நடைபெறும். இதில் 70% நேரடி வகுப்புகள் மூலமாகவும், 30% ஆன்லைன் வழியாகவும் நடத்தப்படும். இந்தப் பயிற்சியில் பின்வரும் திறன்கள் கற்பிக்கப்படும்:

  • 5G கோர் மற்றும் நெட்வொர்க் வடிவமைப்பு.
  • RF (ரேடியோ அலை) சிக்னல் பகுப்பாய்வு மற்றும் புரோட்டோகால் பிழைத்திருத்தம்.
  • srsRAN / Open5GS அமைப்புகளைச் செயல்படுத்தி சோதனை செய்தல்.
  • SDR (Software Defined Radio), MATLAB போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நேரடி சோதனை.

இந்தப் பயிற்சியை முடிப்பவர்கள், 5G RAN பொறியாளர், Protocol Stack Developer, RF Testing பொறியாளர், போன்ற முன்னணி பதவிகளில் வேலைவாய்ப்பைப் பெறலாம். இதன் மூலம், ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை சம்பளம் ஈட்ட முடியும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

  • ECE, EEE, CSE ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள்.
  • வயது 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.

இந்த இலவசப் பயிற்சி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் தகுதியுள்ள பட்டதாரிகள், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/41 என்ற இணையதள இணைப்பில் உடனடியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *