பள்ளி மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு – ஊக்கத்தொகையாக ரூ. 3000 வழங்கும் தமிழக அரசின் அருமையான திட்டம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் “மாவட்ட அளவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3000 ஊக்கத்தொகை” அளிக்கப்படுகிறது.
அதேபோல், “10 வகுப்பு முதல் பரிசுக்கு 1,000 ரூபாயும், இரண்டாம் பரிசு ரூ. 500 மற்றும் மூன்றாம் பரிசுக்கு ரூ. 300 ஊக்கத்தொகையாக” வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள மாணவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.