Wed. Oct 15th, 2025

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல் வெளியீடு : வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து பெறலாம் / Government Tamil IAS Academy releases free textbook for Teacher Eligibility Test: You can book and get it via WhatsApp

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல் வெளியீடு : வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து பெறலாம் / AatchiTamil IAS Academy releases free textbook for Teacher Eligibility Test: You can book and get it via WhatsApp

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து இலவசமாக பெறலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி;
சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய – மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்.

இந்த அகாடமியில் கடந்த ஆண்டுகளில் படித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றிபெற்று பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழக முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல்;
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் (தாள்-1 மற்றும் தாள்-2) தேர்வுகள் 15.11.2025 அன்று தாள்-1 மற்றும் 16.11.2025 அன்று தாள்-2 ம் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகளை எழுதும் ஆசிரியர்களின் வெற்றிக்கு உதவும் வகையில், புதிய பாடத்திட்டத்தின்படி சமச்சீர் பாடப்புத்தகங்களை ‘ஆசிரியர் தகுதித் தேர்வு நோக்கில்’ தொகுத்து இந்த ‘ஆசிரியர் தகுதித் தேர்வு பாடநூல்’ தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பாட நூல்கள் அனைத்தும் இ-புத்தகங்களாக வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும். இந்த பாடநூல்களை படித்தாலே, ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.

முன்பதிவுக்கு;
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) ஆகிய இரண்டு தாள்களுக்கான பாட நூல்களை இலவசமாக பெற ‘TNTET PAPER-I,II FREE TEXT BOOKS’ என்று டைப் செய்து தங்களது முழு முகவரியுடன் 9176055542 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *