இனி அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களையும் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கலாம் – தலைமைத் தேர்தல் அதிகாரி / Anganwadi workers and village assistants can now be appointed as polling station officials – Chief Electoral Officer
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை நியமிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளூர் வாக்களர்களுக்கு நன்கு பழக்கமான அரசு சார்ந்த அலுவலர்
1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் அரசு, அரசு சார்ந்த உள்ளாட்சி மன்ற அலுவலர்களிலிருந்து வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு சார்ந்த நபர்களாக ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர், கிராம அளவிலான பணியாளர்கள், மின்கட்டண பட்டி தயாரிப்பவர்கள், அஞ்சல் பணியாளர், துணை செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர், சுகாதாரப் பணியாளர், மதிய உணவு பணியாளர்கள், ஒப்பந்த முறை ஆசிரியர்கள், மாநகராட்சி வரித்தண்டல்ர் ஆகியோர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இனி ஆசிரியர்களுடன் நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களையும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகளின் நிரந்தரப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு வர முடியாத சூழலில், மேற்கண்டவர்களை நியமிக்க அனுமதி அளித்தனர்.