அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow (JRF) பணியிடம் / Anna University Recruitment 2025 – Junior Research Fellow (JRF) Vacancy
அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) தற்போது 2025ஆம் ஆண்டிற்கான Junior Research Fellow (JRF) பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுடைய M.E/M.Tech பட்டதாரிகள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை, ஆராய்ச்சி துறையில் தங்களின் திறன்களை வெளிப்படுத்த விரும்பும் பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பாகும். விண்ணப்பங்கள் 17 அக்டோபர் 2025 முதல் தொடங்கி 29 அக்டோபர் 2025 வரை ஏற்கப்படும்.
காலியிடங்கள்
மொத்தம் – 01 இடம்
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் பின்வரும் துறைகளில் M.E./M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்:
- Hydrology
- Integrated Water Resource Management
- Irrigation and Drainage Engineering
- Water Resource Engineering and Management
மேலும் 2 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் CSIR-UGC NET / GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவோ, அல்லது மத்திய அரசு நிறுவனங்கள் (DST, DBT, DRDO, ICAR, ICMR, IIT போன்றவை) நடத்தும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவராகவோ இருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்ச வயது வரம்பு அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
சம்பளம்
மாத சம்பளம் ₹31,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
குறிப்பிடப்படவில்லை
தேர்வு முறை
- தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகியப்பட்டு,
- நேர்முகத் தேர்வின் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்:
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- பயோடேட்டா (Bio-data)
- மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டப் படிப்பு சான்றிதழ்கள்
- அனுபவச் சான்றிதழ்கள்
- ஆராய்ச்சி வெளியீடுகள் (இருந்தால்)
- “Concept Note” (கிளைமேட் சேஞ்ச் ஆராய்ச்சி நோக்கம் குறித்த விளக்கம்)
இந்த ஆவணங்கள் அனைத்தும் பின்வரும் முகவரிக்கு 29.10.2025க்குள் அனுப்பப்பட வேண்டும்:
The Director,
Centre for Climate Change and Disaster Management,
Anna University,
Chennai – 600 025.

