கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு / Another chance for those who did not join the cooperative management training
சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சிவகங்கை வட்டம் காஞ்சிரகாலில் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 2025-26ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்ப தேதி 22.8.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.100ஐ இணையவழியில் செலுத்த வேண்டும். இப்பயிற்சிக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கல்வித்தகுதி அசல் சான்றிதழ்கள், ஜெராக்ஸ் நகல் சான்றிதழ்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் போட்டோவுடன் நேரில் சென்று பயிற்சி கட்டணம் ரூ.20,750யை ஆன்லைன் மூலம் செலுத்தி பயிற்சியில் சேரலாம். மேலும், விபரங்களுக்கு 94439 76769, 04575-243995 என தெரிவித்துள்ளார்.