உளவுத்துறையில் 3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு / Applications are invited for 3,717 Assistant Intelligence Officer posts in the Intelligence Department.
மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு
மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER GRADE – II (EXECUTIVE)
காலியிடங்கள்: 3,717
சம்பளம்: மாதம் ரூ. 44,900 – 1,42,400 + இதர சலுகைகள்
தகுதி: ஏதாவெதாரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணியாற்றுவது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 10.8.2025 தேதியின்படி கணக்கிடப்படும். மத்திய அரசின் விதிமுறைப்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர்
எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு அவர்களது அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.550. இதர பிரிவினர்கள் ரூ.650 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in ஆகிய இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக் கொள்ளவும். எழுத்துத்தேர்வு, நேர் முகத்தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.