Sat. Aug 9th, 2025

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் / Art and literature competitions for school and college students organized by Ramalingam Pani Mandram

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் / Art and literature competitions for school and college students organized by Ramalingam Pani Mandram

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அருட்செல்வா் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நினைவாகவும், சென்னை இராமலிங்கா் பணி மன்றத்தின் 58-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் 5 மண்டலங்களாகப் பிரித்து அங்குள்ள கல்வி நிறுவனங்களில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

கல்லூரி மாணவா்களுக்கு…: இளநிலை, முதுநிலை படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, வள்ளுவரும் வள்ளலாரும் அல்லது வள்ளுவரும் காந்தியடிகளும் என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரைப் போட்டி நடத்தப்படும். 60 நிமிஷங்களில் 8 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

வள்ளலாரின் புதிய ஆன்மிகம் அல்லது காந்தியடிகளின் புதிய போா்முறை என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறும். 5 நிமிஷங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவா். கவிதைப் போட்டிக்கான தலைப்பு அரங்கில் கொடுக்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கு…: 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவா்களுக்கு பரசிவநிலை, அருள் விளக்கமாலை, உற்றதுரைத்தல், புனிதகுலம் பெறுமாறு… என்ற தலைப்புகளில் இசைப்போட்டி நடைபெறும். 5 நிமிஷங்கள் நடைபெறும் இப்போட்டியில், மாணவ, மாணவிகள் தனி நபராகவோ, இருவா் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம்.

மனனப்போட்டி, முதல் திருமுறையின் குறை இரந்த பத்து பகுதியின் முதல் பத்து பாடல்களை 10 நிமிஷங்களில் ஒப்பிக்கும் வகையில் நடத்தப்படும்.

பேச்சுப்போட்டியில் வள்ளலாா் வழியில் காந்தியடிகள் அல்லது பசிப்பிணி மருத்துவா் வள்ளலாா் என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிஷம் பேச வேண்டும்.

மண்டல அளவிலான போட்டிகள்: ஆக.16-இல் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, ஆக.24-இல்

திருநெல்வேலியில் சேரன்மகாதேவி சாலையில் உள்ள லிட்டில் பிளவா் மாடல் பள்ளி, ஆக.30-இல் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம், ஆக.31-இல் கோவையில் டாக்டா் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரி, செப்.6-இல் மதுரை காமராஜா் சாலையிலுள்ள தியாகராசா் கல்லூரி ஆகிய இடங்களில் மண்டல அளவிலான போட்டிகள் நடைபெறும்.

இப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இம் மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவா். மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறுபவா்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5 ஆயிரம் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் அதற்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை https://drmcet.ac.in/இணையதளத்தில் பெறலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மின்னஞ்சல் முகவரி அல்லது இராமலிங்கா் பணி மன்றம், டாக்டா் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, பொள்ளாச்சி-642 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டிகள் நடைபெறும் தினத்துக்கு 5 நாள்கள் முன்னதாக விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9087049595 மற்றும் 6382051866 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *