Thu. Jul 24th, 2025

ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு / Assistant Manager Job at RITES: Opportunity for Engineering Graduates

ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு / Assistant Manager Job at RITES: Opportunity for Engineering Graduates

ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்…

பதவி: DGM (Civil-BLT Expert) – 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 11 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: DGM (Transport Economist) – 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில், 5 ஆண்டுகள் கட்டிடக்கலை(பி.ஆர்க்), திட்டமிடல் ஆகிய பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது பொருளாதாரம், புள்ளியியல், மேலாண்மை (நிதி), போக்குவரத்து பொறியியல், போக்குவரத்து திட்டமிடல், போக்குவரத்து பொருளாதாரம், போக்குவரத்து பொறியியல் அல்லது அதற்கு இணையான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: DGM (Civil-Marine Structural Expert) – 2

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை மற்றும் கடல் கட்டமைப்புகள் அல்லது கடலோரப் பொறியியல் அல்லது கடல் பொறியியல் அல்லது சமமான பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.70,000 – 2,00,000

வயதுவரம்பு: 41-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Manager

1. Civil – Planning – 2

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. SHE Expert – 4

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Industrial Safety, Environmental Engineering-இல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

3. Civil-Hydrographic Surveyor – 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மரைன் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. Civil-Rail Alignment Design – 2

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Geotechnical Engineering, Civil Structural Engineering பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5. Civil-GIS Specialist – 1

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Remote Sensing, Geoinformatics பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6. Civil- BIM Modeller – 4

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ. 40,000 – 1,40,000

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தில்லி,குர்கான், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், கௌகாத்தி

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ. 600. இடபுள்யுஎஸ், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ. 300. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *