விநாயகர் சதுர்த்தி வழிபட உகந்த நேரம்
விநாயகர் சதுர்த்தியான இன்று (18.09.2023) விநாயகரை வழிபடுவதற்கான உகந்த நேரம் பற்றிய முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி -18-ம் தேதி முதல் 19ஆம் தேதி வரையாகும்.சதுர்த்தி திதியானது 18.09.2023 தேதி காலை 11:39 மணி முதல் மறுநாள் 19.09.2023 அன்று 11.50 வரையுள்ளது. இந்த வருடம் சதுர்த்தி திதியானது இரண்டு நாட்களில் வருகிறது. இந்த இரண்டு நாட்களிலும் விநாயகரை வணங்கி வழிபடலாம்.
விநாயகர் சிலையை வாங்கும் நேரம்:
18ஆம் தேதி காலை 7:30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால்
எனவே 9:00 மணிக்கு மேல் சிலையை வாங்குவது நல்லது.
19.09.2023 விநாயகர் சிலையை வாங்கும் நேரம்: 7 மணி முதல் 8 .45 மணிக்குள் விநாயகர் சிலையை வாங்கி வைக்க வேண்டும்
விநாயகர் சதுர்த்தி வழிபடும் நேரம்:
18.09.2023 தேதி பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை அல்லது மாலை 6 மணிக்கு மேல் விநாயகரை வணங்குவதற்கான உகந்த நேரம் ஆகும்.
19.09.2023 தேதி 10.30 மணி முதல் 12 மணிக்குள் அல்லது ஆறு மணிக்கு மேல் விநாயகரை வழிபாட உகந்த நேரம் ஆகும்.