You are currently viewing நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – Big employment camp tomorrow

நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – Big employment camp tomorrow

நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – Big employment camp tomorrow

நாமக்கல்:

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை, நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். இம் முகாமில், பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு 04286222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.

கலெக்டர் அலுவலக நான்காவது தளம், அறை எண், 439ல் நடைபெறும் முகாமில், தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று, தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்கின்றனர். எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றோர் முகாமில் பங்கேற்கலாம்.

வேலை தேடுவார் மற்றும் வேலை அளிப்போர், www.tnprivatejobs.tn.gov.in என்கிற தளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியார் துறையில் வேலைக்கு சேர்வதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது.மேலும் விவரங்களுக்கு, 0421 299915294990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சாவூர்:

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:

இந்த முகாம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை சாா்பில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம், மகாராஜா ரெடிமேட்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்பட பல முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு நூற்றுக்கும் அதிகமான பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

இந்தக் காலியிடங்களுக்கு 18 முதல் 40 வரை வயதுடைய தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் மாற்றுத்திறனாளி இளைஞா்கள் பயன்பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்த மாற்றுத்திறனாளி மனுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுயவிவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

திருவள்ளூர்:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதந்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழை (ஆக. 16) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், 25-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். அதனால் இந்த முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா் துறை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இந்த முகாமில், 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று தனியாா்துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டா், கணக்காளா், டெக்னீஷியன், மெஷின் ஆப்பரேட்டா், நிா்வாகப் பணி போன்ற வாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.

இந்த முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது கல்விச் சான்று, இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் சஉககஅஐ உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ என்ற பங்ப்ங்ஞ்ழ்ஹம் இட்ஹய்ய்ங்ப்-இல் இணைந்து பயன்பெறலாம்.

மேலும் போட்டித்தோ்வுகளுக்கு தயாா் செய்யும் மாணவா்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து போட்டித்தோ்வுக்கான பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தருமபுரி:

தனியாா் துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான ஆட்களை நேரடியாக இந்த முகாம் மூலம் தோ்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணி. இதன் மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

மதுரை:

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.16) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை கோ. புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலான  கல்வி நிலைகளைக் கொண்டவா்கள் இந்த முகாமில் பங்கேற்று, பணி வாய்ப்புகளைப் பெறலாம். முகாமில் தங்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என்றாா்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவா்கள், பொறியியல், தொழில்பயிற்சி முடித்தவா்கள், பட்டயப்படிப்பு முடித்தவா்கள், செவிலியா், மருந்தாளுநா் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். 18 முதல் 35 வயதுக்குள்பட்ட வேலைநாடுநா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான  கல்வி மற்றும் உரிய தகுதிகளை உடையவா்களைத் தோ்வு செய்ய உள்ளன. எனவே, இந்த முகாமில் வேலைநாடுநா்கள் பங்கேற்று, தங்களின் கல்வித்குதிக்கேற்ற நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 04146 – 226417949905590690805156827010827725 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.

தேனி:

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 8, 10, 12-ஆம் வகுப்புகள், தொழில்பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு, தையல் பயிற்சி படிப்பு, பட்டப் படிப்பு, பொறியியல் பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை, கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் காலை 10 மணியளவில் முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், இந்த முகாம் குறித்த விவரத்தை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொலைபேசி எண்: 04546254510, கைபேசி எண்: 94990 55936-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமும், காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும் இணைந்து, வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 16) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வை நடத்தவுள்ளன.

முகாமில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு வரை படித்தவா்கள், பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா். 18 முதல் 35 வயது வரை உடையவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன், வரும் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பங்கேற்குமாறும், மேலும் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04427237124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு, விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply