வழக்கமாக பிறை தெரிவதை வைத்து தான் மிலாடி நபி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் நேற்று பிறை தெரிந்ததால் வரும் செப்.5 ஆம் தேதி இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான ‘மிலாடி நபி’ கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சற்றுமுன் அறிவித்துள்ளார்.
இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபி அன்று இஸ்லாமியர்கள், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளை தானமாக வழங்குவது வழக்கம்.