Sun. Mar 1st, 2026

போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் CBSE தேர்வுகள் ஒத்திவைப்பு

போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் CBSE தேர்வுகள் ஒத்திவைப்பு
போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் CBSE தேர்வுகள் ஒத்திவைப்பு

போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் CBSE தேர்வுகள் ஒத்திவைப்பு

போர் பதற்றம் எதிரொலியாக மத்திய கிழக்கு நாடுகளில் நாளை (மார்ச் 02) தொடங்கி இருந்த சிபிஎஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. குறிப்பாக பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தி இருக்கிறது. தொழில், வர்த்தகம், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரமான துபாயில் ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் நாளை (மார்ச் 02) பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் யுஏஇ ஆகிய நாடுகளில் தொடங்க இருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு ஆலோசனை செய்து தேர்வுகளை நடத்துவது குறித்து மார்ச் 5ம் தேதி முடிவு செய்யப்படும். அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளிகளுடன் தொடர்பில் இருந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *