சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகங்கள் இலவசம் / CBSE, textbooks are free
சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகங்கள் இலவசம்
CBSE பள்ளிகளில் பயன்படுத்தப்படும் என்.சி.இ.ஆர்.டி.,(தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) பாடப்புத்தகங்கள், அனைத்து வகுப்புகளுக்கும் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில், என்.சி.இ.ஆர்.டி., இணையதளம் மூலம் இலவசமாக பி.டி.எப்., வடிவில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. இது பள்ளிக் கல்விக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது.
அனைத்து வகுப்புகளுக்கான என்.சி.ஆர்.டி., பாடப்புத்தகங்களையும் பல்வேறு மொழிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும். என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்கள் CBSE மற்றும் பிற கல்வி வாரியங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன; இவை தரமான மற்றும் நம்பகமான கல்வி உள்ளடக்கத்தை வழங்குகின்றன. மாணவர்கள் தங்கள் தாய்மொழி அல்லது விருப்ப மொழியில் பாடங்களை கற்க முடியும்.
இப்புத்தகங்கள் பள்ளிக் கல்வியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கின்றன. CBSE பாடப்புத்தகங்கள், என்.சி.இ.ஆர்.டி., வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்த புத்தகங்கள் மாணவர்கள் பாடத்திட்டத்தை எளிதாக கற்க உதவுகின்றன.
என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்களைத் தவிர தரமான பாடப்புத்தகங்கள், படிப்புப் பொருட்கள், கல்வித் தொகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள் போன்றவற்றையும் வெளியிடுகிறது. எனவே, தொடக்க, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கல்வி நிலைகளின் மாணவர்கள், இந்தப் பாடப்புத்தகங்களின் உதவியுடன் ஒவ்வொரு பாடத்திலும் அவர்களின் அடிப்படைகள் மிகவும் வலுவாக இருப்பதால், தேர்வுகளில் மிக எளிதாக தேர்ச்சி பெறலாம்.
புத்தகங்கள் இல்லாமல், கற்றல் முழுமையடையாது. பாடப்புத்தகங்களை ஆன்லைனில் எளிதாக அணுக மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு இந்த சிறந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பாடப்புத்தகங்கள் கிடைக்காத பிரச்னையையும் இது தீர்க்கிறது.
முழு புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்ய அல்லது குறிப்பிட்ட அலகுகள்/அத்தியாயங்களை மட்டும் பதிவிறக்கம் செய்ய ஒரு வழி உள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்வையிட்டு இந்தப் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.