6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றம் – வரும் கல்வியாண்டில் இருந்து அறிமுகமாகும் என தகவல் – CBSE
சி.பி.எஸ்.சி பள்ளிகள் பொதுவாக, அரசு பள்ளிகளை போல் அல்லாமல் பாடத்திட்டம், தேர்வு முறைகள் மற்றும் மதிப்பீடு முறைகள் ஆகியவற்றில் வேறுபட்டு காணப்படுகின்றன. அந்தவகையில், தற்போது வருகின்ற 2025 -2026 ஆம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.சி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் , சி.பி.எஸ்.சி பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் மதிப்பீடுகள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் உள்ள இணக்கமான பாடங்களை கற்பித்தல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய பாடத்திட்டங்களை https://cbseacademic.nic.in/ என்ற சி.பி.எஸ்.சி யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.