CPCL Apprentice வேலைவாய்ப்பு 2025 –அப்பிரண்டிஸ் பணியிடங்கள்
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Chennai Petroleum Corporation Limited – CPCL) சார்பில் Apprentice பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு B.A, B.Com, B.Sc, Diploma, ITI தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள் அறிவிக்கப்படவில்லை. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cpcl.co.in வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 07 நவம்பர் 2025 ஆகும்.
பணியிட விவரங்கள்
| பதவி பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| Apprentice | குறிப்பிடப்படவில்லை |
கல்வித் தகுதி
பின்வரும் பிரிவுகளில் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்:
- Laboratory Assistant (Chemical Plant)
- Secretarial Office Assistant / Executive HR
- Graduate Apprentice (B.A / B.Com / B.Sc / B.E)
- Technician Apprentice (Diploma in Engineering)
- School Dropouts (12th Std) மற்றும் Skilled Certificate Holders
வயது வரம்பு
- குறைந்தபட்ச வயது: 18 வயது
- அதிகபட்ச வயது: 20 வயது
சம்பளம்
| பிரிவு | மாத ஊதியம் (₹) |
|---|---|
| Laboratory Assistant (Chemical Plant) | ₹11,040 |
| Secretarial Office Assistant / Executive HR | ₹12,300 |
| Graduate Apprentice (B.A / B.Com / B.Sc etc.) | ₹12,300 |
| Graduate Apprentice (Engineering) | ₹12,300 |
| Technician Apprentice (Diploma) | ₹10,900 |
| School Dropouts / Skilled Certificate Holders | ₹9,600 |
தேர்வு செய்யப்படும் முறை
- கல்வித் தகுதி மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் (Merit List) உருவாக்கப்படும்.
- தேவையெனில் நேர்காணல் (Interview) / சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை
- முதலில், cpcl.co.in இணையதளத்திற்கு செல்லவும்.
- “Chennai Petroleum Corporation Limited” நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும்.
- தகுந்த Apprentice பிரிவை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பத்தின் நகலை அச்செடுத்து வைத்துக்கொள்ளவும்.

